கோவை: பலாத்கார வழக்கு - மருத்துவமனையில் நீதிபதி விசாரணை

0பார்த்தது
கோவை அரசு மருத்துவமனையில், கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த மாணவி, விமான நிலையம் அருகே காரில் இருந்தபோது சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், கார்த்திக், குணா ஆகியோர் மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏழு சிறப்பு அணிகள் அமைத்து தேடிய காவல்துறையினர் துடியலூர் அருகே மூவரையும் சுட்டுப் பிடித்தனர். மூவர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், தாக்குதல், சொத்து சேதம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இவர்கள் மீது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி