கோவை சூலூரைச் சேர்ந்த ராமசாமி சென்னியப்பன், புதிய ஸ்கூட்டர் வாங்கியபோது அதில் கீறல்கள் மற்றும் நட்டு, போல்டுகள் இல்லாததால் கோவை நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வாகனத்தில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்ட நிலையில், சேவை மையம் அதை பழைய வாகனம் என தெரிவித்ததாக அவர் கூறினார். மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர் மாரிமுத்து, சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்காக ரூ. 15 ஆயிரம் இழப்பீடும், ரூ. 5 ஆயிரம் கோர்ட் செலவும் வழங்க உத்தரவிட்டனர்.