கோவை அருகே பேரூர் அண்ணா நகரில் வசிக்கும் 13 வயது சிறுவன் விஷ்வா, மீன்தொட்டியை சுத்தம் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்பில் சேரத் தயாராக இருந்த விஷ்வா, மீன்தொட்டியில் இருந்த மோட்டாரை மின் இணைப்பை துண்டிக்காமல் வெளியே எடுத்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.