கோவை: தனியார் விதை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு!

0பார்த்தது
கோவை: தனியார் விதை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு!
கோவையில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பதிவு சான்று, முளைப்பு சான்று அறிக்கை, கொள்முதல் மற்றும் விற்பனை பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. ராபி பருவத்திற்கேற்ற விதைகள் மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆவணங்கள் இன்றி விற்பனை செய்ய முயன்ற ரூ. 51,780 மதிப்பிலான 149 கிலோ விதைகள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி