கோவை: இருசக்கர வாகன விபத்து - மாணவன் உயிரிழப்பு!

2பார்த்தது
கோவை: இருசக்கர வாகன விபத்து - மாணவன் உயிரிழப்பு!
கோவை சிறுவாணி சாலை பகுதியில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகன விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் பிரவீன் (15) பரிதாபமாக உயிரிழந்தார். மாதம்பட்டி அருகே வளைவில் அதிவேகமாக ஓட்டப்பட்ட வாகனம் சறுக்கி விபத்துக்குள்ளானதில், பின்புறம் அமர்ந்திருந்த பிரவீன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டிச் சென்ற நண்பன் மணிகண்டன் (19) காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரவீனின் தந்தை அளித்த புகாரின் பேரில் பேரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.