கோவை: நவம்பர் 20ல் ஒற்றுமை ஓட்டம் - செய்தியாளர் சந்திப்பு

2பார்த்தது
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நவம்பர் 20ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒற்றுமை ஓட்டம் – Unity March Rally நடைபெறுகிறது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எனது இளைய பாரதம் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பா. ஜ. க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். mybharath. gov. in இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வயதினரும் பங்கேற்கலாம் என மாவட்ட இளைஞர் அலுவலர் ஜோயல் பிரபாகர் தெரிவித்துள்ளார். சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று, டிசம்பர் 6ஆம் தேதி குஜராத்தில் நிறைவு விழா நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி