கோவை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தீவிரம்!
கோவை புறநகர் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் சரிபார்ப்புப் பணி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செலக்கரசல் பகுதியில் கிராம வருவாய் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்த்து, விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்த்தல் மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணி வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களின் துல்லியத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
