கோவை: நாளை கோவையில் பில்லூர் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

0பார்த்தது
கோவை: நாளை கோவையில் பில்லூர் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
கோவை, பில்லூர் அணைக்கு நீர்வழங்கும் குந்தா அணையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் பில்லூர் 2, 3-வது கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கே. வி. வி. , கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைப்படும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி