கோவையைச் சேர்ந்த ரபினா ஸ்ரீ (25) என்பவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். பொறியியல் பட்டதாரியான இவர், தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்த் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ரபினா ஸ்ரீ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.