கோவை: வாலிபர் அடித்து கொலை - தப்ப முயன்ற போது கால் முறிவு

1பார்த்தது
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (20), உறவினர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், நண்பர்களுடன் மது அருந்தும்போது தாக்கி கொலை செய்யப்பட்டார். கோகுல கிருஷ்ணனின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், அவரது நண்பர்களான மனோஷ் (27), கமல கண்ணன் (29) ஆகியோர் பிரவீன்குமாரை தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த இருவரையும் பிடிக்க முயன்றபோது, அவர்கள் தடுமாறி விழுந்து காயமடைந்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி