காரமடை அருகே பில்லூர் அணை பகுதியிலுள்ள பரளிக்காடு பழங்குடியினர் கிராமத்தில் நேற்று அதிகாலை காட்டுயானை தாக்கியதில் 44 வயது கூலி தொழிலாளி சிவக்குமார் உயிரிழந்தார். வீட்டின் அருகே நின்ற யானையை கண்டு வெளியே வந்த அவரை யானை தாக்கியதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.