ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் இன்று மின்தடை!

82பார்த்தது
ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் இன்று மின்தடை!
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9: 00 மணி முதல் மாலை 5: 00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மாநகர் செயற்பொறியாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளாக, தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணாதுரை சிலை - கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு, புலியகுளம் ரோடு (சுங்கம் - விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி. மற்றும் மேட்டுப்பாளையம் செயற்பொறியாளர் சத்யா தெரிவித்தபடி, பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காகாபாளையம் மற்றும் சொக்கம்பாளையம் பகுதிகளிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும். பதுவம்பள்ளி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி