கோவை மார்க்கெட்டில் வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு

75பார்த்தது
கோவை மார்க்கெட்டில் வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு
கோவை தடாகம் ரோடு கேஎன்ஜி புதூரை பிரிவை சேர்ந்தவர் செந்தில்குமார்(42). இவர் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அந்த வாலிபர் தப்பினார். இது குறித்து செந்தில்குமார் சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தா. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் கேட்டு மிரட்டியது கோவை வெங்கிடாபுரம் புவனேஷ்வரி நகரை சேர்ந்த ஹரிஹரன்(21) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி