கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

3பார்த்தது
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதுவரை 39-வது முறையாக மிரட்டல் வந்துள்ள நிலையில், அடிக்கடி இ-மெயில் முகவரியை மாற்றி அனுப்பும் மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி