கோவை சின்னத்தடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி எவாஞ்சலி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார். அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டி, கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். மேலும், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து பல சாதனைகள் படைக்க அனைவரும் வாழ்த்தினர்.