கோவை: விபசார வழக்கில் 2 பேர் கைது

0பார்த்தது
கோவை: விபசார வழக்கில் 2 பேர் கைது
கோவை மாவட்டம் துடியலூர் அருகே விபசாரம் நடைபெற்றதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தி 2 பேரை நேற்று கைது செய்தனர். கவுண்டம்பாளையம் பி. என். டி. காலனி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், வடமதுரை வி. ஐ. பி. காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, புரோக்கராக செயல்பட்ட அசோக் குமார் (28) மற்றும் இளம்பெண் ஆகியோரை போலீசார் கைது செய்து மேலான விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி