கோவை: கம்பி வேலியில் சிக்கி 2 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு

556பார்த்தது
கோவை மாவட்டம் வாளையார் அருகே அய்யன்பதி பகுதியில் நேற்று, விளைநிலத்தில் உலவிய 2 வயது பெண் சிறுத்தை முள்கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தது. வனத்துறையினர் சிறுத்தையின் உடலை ஆய்வு செய்துள்ளனர். கால்நடை மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கை வந்த பின் முழுமையான உயிரிழப்பு காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.