கோவை: மதுக்கரையில் போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது

597பார்த்தது
கோவை: மதுக்கரையில் போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது
கோவை மதுக்கரை அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பதுங்கியிருந்த கோவை குனியமுத்தூரை சேர்ந்த எபினேசர் (24), சுகுணாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (25), பி. கே. புதூரை சேர்ந்த ஹரிபிரசாந்த் (21) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி