கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோவில் நடைபாதை பகுதியில் உணவு தேடி இன்று ஒற்றை காட்டு யானை நின்றது. இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. யானையை கண்ட பக்தர்கள் அச்சத்துடன் அங்கிருந்து விலகிச் சென்றனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.