கோவை: சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் படுகாயம்

54பார்த்தது
கோவை: சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் படுகாயம்
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலை கோவனூர்புதூரை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் சஞ்சய் (வயது 18). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சஞ்சய் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சஞ்சையை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெரியநாயக்கன்பாளையம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி