கோவை: காட்டுயானைகளுக்காக மேலும் ஒரு சுரங்கப்பாதை

78பார்த்தது
கோவை: காட்டுயானைகளுக்காக மேலும் ஒரு சுரங்கப்பாதை
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே காட்டுயானைகள் ரெயில்வே தண்டவாளத்தை எளிதில் கடக்கும் விதமாக மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் இன்று தெரிவித்துள்ளார். கோவை வனக்கோட்டத்தில் பல காட்டுயானைகள் நடமாடும் நிலையில், மதுக்கரை – வாளையாறு வழியாக செல்லும் ரெயில் பாதையில் இதற்கு முன் 2 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. 

அவற்றின் மூலம் இப்போது வரை 2,700 காட்டுயானைகள் சுரங்கப்பாதை வழியாக பாதுகாப்பாக கடந்துள்ளன. தண்டவாளம் அருகே 12 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது உள்ள பி-டிராக் பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவில் மூன்றாவது சுரங்கப்பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, ரெயில்வேயின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி