கோவை: மின்மயான ஊழியர் மீது தாக்குதல்; வாலிபருக்கு சிறை

53பார்த்தது
கோவை: மின்மயான ஊழியர் மீது தாக்குதல்; வாலிபருக்கு சிறை
கோவை ஆத்துப்பாலம் அணைமேடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி, மாநகராட்சி மின்மயானத்தில் உடல் எரியூட்டும் எந்திர ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி இரவு 11.45 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குனியமுத்தூரைச் சேர்ந்த பைசல் (வயது 29) உள்ளிட்ட 8 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்து, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். 

இதுகுறித்து பைசல் உட்பட 8 பேர் மீது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 

வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பைசல் உட்பட 7 பேரும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட பைசலுக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 6 பேரையும் விடுதலை செய்தார்.

தொடர்புடைய செய்தி