சபரிமலை அய்யப்பன் தரிசன சீசன் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு தினமும் சுமார் 150 டன் வாழைத்தார்கள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக நேந்திரன் வகை வாழைத்தாருக்கு அதிக தேவை உள்ளது. காரமடை நால்ரோடு பகுதியில் நடைபெற்ற வாழைக்காய் ஏலத்தில், மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 4,200-4,500 வாழைத்தார்களை கொண்டு வந்தனர். கதலி கிலோ ரூ. 35–40, நேந்திரன் கிலோ ரூ. 25–30 விலையில் விற்பனையாகின. பல்வேறு வகை வாழைத்தார்களின் தார் விலை ரூ. 150 முதல் ரூ. 800 வரை இருந்தது.