கோவையில் கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் வானதி சீனிவாசன் தலைமையில் நேற்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்ப்ரே பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும், பாலியல் குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும் சட்டம் கொண்டு வர வேண்டும், திமுக அரசு பதவி விலக வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.