கோவை: பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது பஸ் மோதல்!

2பார்த்தது
கோவை-திருச்சி சாலையில் சுங்கம் அருகே இன்று காலை பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. பெண் ஓட்டுநர் ஓட்டிய ஆட்டோ யூ-வளைவில் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, ஆட்டோ சேதமடைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார் ஆய்வு செய்து, வேகக் கட்டுப்பாட்டிற்காக இரும்பு தடுப்பு அமைக்க உத்தரவிட்டார். மாணவர்கள் பாதுகாப்பாக மாற்று வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி