கோவை கொடிசியா வளாகத்தில், கொடிசியா பாதுகாப்பு புதுமை மற்றும் அடல் இன்க்யூபேஷன் மையம் சார்பில் இரண்டு நாள் பாதுகாப்புத்துறை கருத்தரங்கு நேற்று துவங்கியது. இந்திய பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறை பங்கேற்பை அதிகரித்தல், பரஸ்பர தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் பல்வேறு பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. இந்திய ராணுவத்தின் உள்நாட்டு உற்பத்தி, கொள்முதல், அரசு மின் சந்தை, எதிர்கால தேவைகள், உற்பத்தியாளர் பதிவு, தரச் சான்றிதழ், அரசு திட்டங்கள், நிதி–கடன் வசதிகள் குறித்து சிறப்பு அமர்வுகள் நடைபெறுகின்றன. பாதுகாப்பு உற்பத்தியாளர் பதிவு மற்றும் தரநிலை மேலாண்மை இயக்குநர் மனோகரன் நிகழ்வை தொடங்கி வைத்தார். கொடிசியா தலைவர் கார்த்திகேயன், TIDCO துணை தலைவர் விநாயகம், கொடிசியா DIIC தலைவர் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.