கோவை: தன்பாத் சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்

78பார்த்தது
கோவை: தன்பாத் சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்
கோவையில் இருந்து தன்பாத் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 03680) இன்று காலை 7.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக தன்பாத் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 4.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதாவது, கோவை-தன்பாத் சிறப்பு ரயில் 8 மணி 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என சேலம் கோட்டம் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி