கோவை: போதைப் பொருள் கடத்தல்: 4 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை!

0பார்த்தது
கோவை: போதைப் பொருள் கடத்தல்: 4 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை!
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே கக்கநல்லா சோதனைச் சாவடியில் கடந்த அக்டோபர் 26, 2023 அன்று வாகன தணிக்கையின் போது, ஒரு காரில் இருந்து 120 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மலப்புரத்தைச் சேர்ந்த முனிர்காட்டிபுரம், பாசில்ஜமான், ஷியாத், ஷகபாஸ் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவிலிருந்து போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் இந்த வழக்கை விசாரித்த கோவை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், நால்வருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ. 9 லட்சம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்தி