திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சரத்பாபு (42), 2023-ல் ஸ்கூட்டர் விபத்தில் வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு கடுமையான வலி தொடர்ந்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவரது கையில் ஸ்டேப்ளர் பின் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், கோவை அரசு மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டபோது திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றும் சரத்பாபு நேற்று புகார் தெரிவித்துள்ளார். தற்போது கைக்குள் உள்ள ஸ்டேப்ளர் பின் அகற்ற சிகிச்சை தேவைப்படுவதாக அவர் கூறினார்.