கோவை: அதிமுகவிலிருந்து நீக்கம்: மனவேதனையில் செங்கோட்டையன்

3பார்த்தது
50 ஆண்டு கால அரசியல் பயணத்திற்குப் பிறகு, அதிமுகவில் இருந்து அனைத்து பதவிகளும், அடிப்படை உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்டதனால் தமக்கு மனவேதனை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தனை ஆண்டுகள் இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கிடைத்த பரிசு, அடிப்படை உறுப்பினராக கூட இருக்கக்கூடாது என்பதே என வருத்தம் தெரிவித்து, தமிழக வெற்றி கழகம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் கிளம்பிச் சென்றார்.

தொடர்புடைய செய்தி