கோவை: சிவப்பு வேர்களின் குடும்பச் சங்கமம் - வாரிசுகள் கௌரவம்

0பார்த்தது
கோவை எஸ். என். ஆர் அரங்கில் சிஐடியு 16-வது மாநில மாநாட்டை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சிவப்பு வேர்களின் குடும்பச் சங்கமம் நிகழ்ச்சியில், உழைக்கும் மக்களின் உரிமைக்காக உயிர்தியாகம் செய்த 12 தியாகிகளின் குடும்பத்தினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். மாவட்டத் தலைவர் கே. மனோகரன் தொடக்க உரையாற்ற, மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சிபிஎம் மூத்த தலைவர் பி. ஆர். நடராஜன் தியாகி ராக்கியண்ணன், ஒரு வர்க்கப் போராளியின் வரலாறு மற்றும் வியர்வை குருதிகள் என்ற நூல்களை வெளியிட்டார். மாநிலத் தலைவர் அ. சவுந்திரராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் உள்ளிட்டோர் தியாகிகளைப் பற்றிப் பேசினர். தியாகிகள் குடும்பத்தினர் சார்பில் வத்சலா ரமணி நன்றி உரையாற்றினார்.