பொள்ளாச்சியில் பந்தல் காய்கறி விவசாயிகளை வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து நசுக்குவதாக குற்றஞ்சாட்டி, விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று பாகற்காய் மூட்டைகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு ஏக்கருக்கு ரூ. 1.30 லட்சம் வரை செலவு செய்து சாகுபடி செய்த பாகற்காயை கிலோ ரூ. 17க்கு மட்டுமே வாங்க முயல்வதால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பந்தல் காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, சிண்டிகேட் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.