கோவை: நிதி நிறுவனத்தில் ரூ. 1. 41 கோடி மோசடி!

1பார்த்தது
கோவை: நிதி நிறுவனத்தில் ரூ. 1. 41 கோடி மோசடி!
கோவை காரமடைப் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ. 1 கோடியே 41 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், மேலாளர் கார்த்திகேயன் மற்றும் ஏஜென்ட் ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2021 முதல் 2024 வரை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல், கணக்குகளைப் பொய்யாகப் பதிவு செய்து மென்பொருளைச் சேதப்படுத்தி மோசடி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விஜயா அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகுமாரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அருண்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி