கோவை போத்தனூர்–செட்டிபாளையம் சாலையோர குப்பைமேட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வெயில் மற்றும் காற்றின் வேகத்தால் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து அடர்ந்த கரும்புகை பரவியது. இதனால் முக்கிய சாலையில் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். நச்சுப் புகை குடியிருப்புகளுக்குள் பரவி மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.