கோவை: மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை வாய்ப்பு

71பார்த்தது
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை வாய்ப்பு
வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும் என கோவையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி இன்று (ஜூலை 31) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேற்கு மாவட்டங்களில் தூறல் அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மணிக்கு 8 முதல் 26 கி. மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், காற்று அதிகமாக வீசும் நேரங்களில் களைக் கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார். மண் அரிப்பு தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி