கோவை: ஐ. டி. பெண்கள் லேப்டாப்புகள் திருட்டு

766பார்த்தது
கோவையில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் லேப்டாப்புகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈச்சனாரி அருகே உள்ள இரத்தினம் ஐ. டி. பார்க்கில் பணிபுரியும் இருவர், சுந்திராபுரம், மதுக்கரை மார்கெட் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். நேற்று மர்ம நபர் ஒருவர் அந்த விடுதியில் நுழைந்து, இரண்டு லேப்டாப்புகளை திருடிச் சென்றார். இந்த சம்பவம் விடுதியின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி