கோவை: இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவ செலவினை வழங்க உத்தரவு

81பார்த்தது
கோவை: இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவ செலவினை வழங்க உத்தரவு
கோவை வீரகேரளத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் தாக்கல் செய்த மனுவின் பேரில், அவரது கணவர் மருத்துவ சிகிச்சைக்காக செலவிட்ட ரூ. 3.09 லட்சத்தை வழங்குமாறு கோவை நுகர்வோர் கோர்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நேற்று உத்தரவிட்டது. 

சென்னையை தலைமையிடமாக கொண்ட தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்த கோவிந்தராஜ், திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவ செலவினை வழங்க மறுத்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு தலைமையிலான குழு, மருத்துவச் செலவாக ரூ. 3.09 லட்சம், மன உளைச்சலுக்கு ரூ. 10 ஆயிரம், நீதிமன்றச் செலவாக ரூ. 5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி