கோவை: நகை தொழிலாளி கடத்தல் - ரூ. 41 லட்சம் கொள்ளை

0பார்த்தது
கோவை அருகே வாளையார் சோதனைச் சாவடி பகுதியில் பட்டப்பகலில் நகை தொழிலாளி ஒருவர் கடத்தப்பட்டு ரூ. 41 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்த லட்சுமணன் (56) என்பவர், தங்கம் விற்ற பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் வழிமறித்து அவரை கடத்தி, பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கே. ஜி. சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் கார் எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி