கோவை: பாம்பை பிடிக்க முயன்றவருக்கு பாம்பு கடி

64பார்த்தது
கோவை: பாம்பை பிடிக்க முயன்றவருக்கு பாம்பு கடி
கோயம்புத்தூர், தொண்டாமுத்தூர் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் பாம்பு ஒன்று புகுந்திருப்பதாக தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தோஷ் என்ற பாம்பு பிடி வீரருக்கு நாகப்பாம்பு கடித்தது. 

கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் ராஜ நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிடித்து வனப்பகுதியில் விடுவித்து வருகிறார் சந்தோஷ். இந்நிலையில் அவருக்கு பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாம்பு கடித்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். பாம்பு பிடி வீரரையே பாம்பு கடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Job Suitcase

Jobs near you