கோவை போத்தனூர் சாலையில் சங்கமம் திருமண மண்டபம் அருகே அரேபியன் டெஸ்ஸர்ட் விற்பனையில் பிரபலமான மெல்பான் புதிய கிளை நேற்று திறக்கப்பட்டது. ஏகேஎஸ் சேர்மன் சுல்தான் அமீர் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முதல் விற்பனையை ஹாஜி இனயாத்துல்லாஹ் தொடங்கி வைத்தார். கடை உரிமையாளர் சுஹைல் அஹமத் கூறுகையில், வெளிநாடுகளில் கிடைக்கும் பிரபலமான அரேபியன் டெஸ்ஸர்ட்கள் இங்கு அனைத்து வகைகளிலும் கிடைக்கும் என்றும், திறப்பு விழாவை முன்னிட்டு அனைத்து அரேபியன் டெஸ்ஸர்ட்களுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். 200 ரூபாயில் தொடங்கி, 4 பேர் வரை சாப்பிடக்கூடிய அளவில் பல்வேறு வகை இனிப்புகள் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.