கோவை கணபதி மாநகர் வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்த பின், பா. ஜ. க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் எம். எல். ஏ தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தி. மு. க மீது கடும் விமர்சனம் செய்த அவர், ஒவ்வொரு வீட்டிலும் சென்று மக்கள் ஆதரவை பெற வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.