கோவை தொண்டாமுத்தூர் அருகே, காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த கார்த்திக் மீது 31-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதால், இளம்பெண் அவருடனான பழக்கத்தை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்களுடன் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்து பாட்டில்களை வீசியுள்ளார். இதில் செருப்பு ஸ்டாண்டில் தீப்பற்றி காலணிகள் எரிந்தன. 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.