கோவை: தரமற்ற உணவு.. மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

633பார்த்தது
கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இருப்பதாக 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்தும் வெளியில் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. சுகாதாரமற்ற உணவால் சில மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.