கோவை: சாய்பாபா காலனி பகுதிகளில் நாளை மின்தடை

0பார்த்தது
கோவை: சாய்பாபா காலனி பகுதிகளில் நாளை மின்தடை
கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். ஹவுசிங் யூனிட், ஏ. ஆர். நகர், தாமரை நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, நல்லாம்பாளையம் ரோடு, டி. வி. எஸ். நகர் ரோடு, ஜெம் நகர், அமிர்தா நகர் உள்ளிட்ட மணியக்காரம்பாளையம் பகுதிகள் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள இந்திரா நகர், காவேரி நகர், கே. ஜி. லே-அவுட், கிரி நகர், பூம்புகார் நகர், சரவணா நகர், வள்ளி நகர், ரெயில்வே மென்ஸ் காலனி, கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி