பாரத பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகையை முன்னிட்டு, விமான நிலையத்தில் வரவேற்பு ஏற்பாடுகளை பா. ஜ. க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம். எல். ஏ இன்று காலை ஆய்வு செய்தார். பிரதமரை வரவேற்க வரும் கட்சித் தொண்டர்களுக்கு வாகன நிறுத்துமிடம், கலைநிகழ்ச்சி இடவசதி வழங்க காவல் துறை ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். கோவை கொடிசியாவில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது இயற்கை விவசாயத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். 2,000 ஆண்டுகளுக்கு முன்பே முன்னோர்கள் வழங்கிய கோட்பாடே இயற்கை வேளாண்மை என்றும் அவர் குறிப்பிட்டார்.