கோவை: பதப்படுத்தும் தொழில் வளர்ச்சி மையம் திறப்பு

69பார்த்தது
கோவை: பதப்படுத்தும் தொழில் வளர்ச்சி மையம் திறப்பு
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் பிரதான் மந்திரி முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தென்னைப் பொருட்கள் பதப்படுத்தும் தொழில் வளர்ச்சி மையத்தை, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள இந்த மையம், உணவு பதன்செய் பொறியியல் துறையின் மாநில தொழில்நுட்ப பயிற்சி மையமாகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பு முகவாகவும் செயல்படும். விழாவில் கூடுதல் தலைமைச் செயலர் அதுல் ஆனந்த், தொழில் துறை ஆணையர் நிர்மல் ராஜ், வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன், முதல்வர் ரவிராஜ் மற்றும் துறை தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி