இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத்தின் ஆண்டு மாநாடு, கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையின் சார்பில் கோவையில் நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட மருத்துவ இயற்பியலாளர்கள் கலந்துகொண்டனர். கதிர்வீச்சு சிகிச்சை, இமேஜிங் தொழில்நுட்பங்கள், கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் தரஉறுதிப்பாடு உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்லா ஜி. பழனிசாமி தலைமை தாங்கினார். புற்றுநோய் மருத்துவம் மற்றும் சிகிச்சைகளின் வெளிப்பாடுகளை மேம்படுத்துவதில் மருத்துவ இயற்பியலின் வளர்ந்துவரும் முக்கியத்துவம் எடுத்துக்கூறப்பட்டது.