கோவை: நலத்திட்டங்கள் செய்யாத அதிமுக - செந்தில் பாலாஜி தாக்கு

2பார்த்தது
பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் செய்யப்படவில்லை என்றும், தற்போது அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் வேடிக்கையாக இருப்பதாகவும் விமர்சித்தார். மீண்டும் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என நம்பிக்கை தெரிவித்த அவர், பொள்ளாச்சியில் திமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் கூறினார். கூட்டத்தில் பலர் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி