கோவையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு எதிராக நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சதீஷ் (30), கார்த்தி (21) இருவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் குணா (20) மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். இவர்கள் மீது கொலை, வாகன திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் உள்ளதாகவும், சம்பவம் மது போதையில் நடந்ததாகவும், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று தெரிவித்தார். குற்றவாளிகள் மூவரும் திருமணமாகாதவர்கள் என்றும், சிசிடிவி காட்சிகள் மற்றும் அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எந்தவித குற்றமும் இல்லை எனவும், பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் ஆணையர் தெரிவித்தார். சம்பவத்துடன் தொடர்புடைய பாஜகவினர் அனுமதியின்றி தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மொத்தம் 7 தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், 100க்கும் மேற்பட்ட போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.