கோவை: த. வெ. க. நிர்வாகி லாரி மோதி பலி

0பார்த்தது
கோவை: த. வெ. க. நிர்வாகி லாரி மோதி பலி
மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மனைவி, குழந்தைகளை அழைத்துவர சென்ற த.வெ.க. பொள்ளாச்சி தெற்கு நகர துணைச் செயலாளர் தனேந்திரனின் மகன் நேரு (37) லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பொள்ளாச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்குட்டுபாளையத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது புளியம்பட்டி அருகே நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதியில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகாலிங்கபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you